07 August 2009

வைரமுத்துவின் வரிகள் சில

•
விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை

•
யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை

பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை

கரடிக்கு மான்கள்
கால் பிடித்து விட்டதில்லை

ஒன்று
சுதந்திரத்தின் வானம்

இல்லை
மரணத்தின் பள்ளம்

இடைப்பட்ட வாழ்கை
விலங்குக்கில்லை


•
வாழப் பிறந்தவர்களே

உங்கள்
வாழ்கை முறை
சற்று மாற்றுங்கள்

ஒரு மாறுதலுக்காக –
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்

தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்

மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்

மனைவிக்கு
எத்தனை நாளைக்குத்தான்
பசையற்ற பழைய முத்தம் ?

நாளை முதல்
முயல் குட்டிகளுக்கும்
முத்தம் கொடுங்கள்

உங்கள் படுக்கையில்
ஒரு
மூன்றாம் தலையனை
முளைக்கட்டும்

அந்தக்
குட்டித் தலையணையில்
உங்கள்
குட்டிநாய் தூங்கட்டும்…

•

மனிதர்கள் வணங்கும்படி
சில விலங்குகள் உண்டு
விலங்குகள் வணங்கும்படி
இங்கு மனிதர்கள் உண்டா?...

•

3 comments:

Parth said...

"விலங்குகள் வணங்கும்படி
இங்கு மனிதர்கள் உண்டா?... "
You haven't seen Rama narayanan films? Snakes, dogs, cows, goats, elephants everything will kneel and bow-even dance sometimes- to the humans(allegedly Gods) :D

Black Light said...

Lol... Vairamuthu should revise this poem then:-)

Anonymous said...

@parth
lol

@gokul
We can know the true nature of dog if we are born as dog!:D

But the lines are like a nail to the head!