12 August 2009
09 August 2009
சில வரிகள்...
என் பூக்கள் வாசமாவது உன்னுடன்
என் வாழ்க்கை அர்த்தம் கண்டது உன்னுடன்
என் கிறுக்கலும் கவிதையாவது உன்னுடன்
என் மரணம் ஜனனமாவது உன்னுடன்
விண்னுடன் நான் செல்லும் நாள்தனில்
என்னுடன் கொண்ட உடல் அழிந்து
என் ஆன்மா ஆவலுடன் அடக்கமாகும் உன்னுடன்... உன்னுடன்!
08 August 2009
07 August 2009
வைரமுத்துவின் வரிகள் சில
விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை
•
யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை
பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை
கரடிக்கு மான்கள்
கால் பிடித்து விட்டதில்லை
ஒன்று
சுதந்திரத்தின் வானம்
இல்லை
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்கை
விலங்குக்கில்லை
•
வாழப் பிறந்தவர்களே
உங்கள்
வாழ்கை முறை
சற்று மாற்றுங்கள்
ஒரு மாறுதலுக்காக –
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்
தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்
மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்
மனைவிக்கு
எத்தனை நாளைக்குத்தான்
பசையற்ற பழைய முத்தம் ?
நாளை முதல்
முயல் குட்டிகளுக்கும்
முத்தம் கொடுங்கள்
உங்கள் படுக்கையில்
ஒரு
மூன்றாம் தலையனை
முளைக்கட்டும்
அந்தக்
குட்டித் தலையணையில்
உங்கள்
குட்டிநாய் தூங்கட்டும்…
•
மனிதர்கள் வணங்கும்படி
சில விலங்குகள் உண்டு
விலங்குகள் வணங்கும்படி
இங்கு மனிதர்கள் உண்டா?...
•
உன்னோடு நானிருந்த ஒவ்வோர் மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே ...
வாழ்த்து
“என் தாய் சொல்லித்தந்த மொழி என்பதால்
தாய்த்தமிழ் மீது எனக்கு மிகையான காதலும் பக்தியும் உண்டு...
கல்கியின் எண்ண அலைகளிட்ட ஓசையில்
நான் தூக்கம் மறந்ததுண்டு...
சாண்டில்யன் வடித்த காதல் காட்சிகளை
கனவில் மறைந்திருந்து கண்டதுண்டு...
பாரதியார் கண்ணீர் சிந்திய வரலாறு படித்து
என் கண்கள் கண்ணீர் வடித்ததுண்டு...
கண்ணதாசன் தான் கடைசித் தமிழ்க்கவி என்று நான் வாதிட்டதுண்டு,
வைரமுத்துவின் வரிகள் படித்து நண்பர்களோடு சிலாகித்ததுண்டு,
முத்துகுமாரும் சிநேகனும், இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ திரையிசைக்கவிகளின் பாடல்களை என்னை மறந்து பாடியதுண்டு...
இறக்கும் வரை தமிழ் படிக்க ஆவலும், ஆசையும் உண்டு உண்டு !!!. “
தமிழ் ஒரு மொழி என்பதைத்தாண்டி, அது ஒரு நாகரிகத்தின் அடையாளம், உணர்வு என்று அர்த்தம் கொள்வதே சரி என்று நான் எண்ணுகிறேன்.
நாகரீகத்தின் படிநிலைகளான வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் - கால்நடை மேய்த்தல் - கடலமெற்செரல் - உழவுசெய்தல் என்பனவற்றை குறிஞ்சி - பாலை - முல்லை - நெய்தல் - மருதம் என்று பகுத்துப்பார்த்து பாடியவர் நம் மூதாதையோர்.
இப்படி தமிழரின் வாழ்க்கையில் பிரியாயிடம் பெற்ற தமிழ் மொழி, காலத்துகேற்ப தன்னை மாற்றி இது நாள் வரை நம்மை இன்புறச்செய்து வருகிறது.
சங்க இலக்கியமாய், ஈரடியாய், தோத்திரப்பாடலாய், புதுக்கவிதையாய், இக்கால 'ஹைக்கூ' வாய், உருமாறி தமிழனை விட்டுப் பிரியாமல் இருக்கின்ற
பகிர்வதன்றோ தமிழரின் குணம்!!!
:-)

