07 August 2009

உன்னோடு நானிருந்த ஒவ்வோர் மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே ...






வாழ்த்து



“என் தாய் சொல்லித்தந்த மொழி என்பதால்

தாய்த்தமிழ் மீது எனக்கு மிகையான காதலும் பக்தியும் உண்டு...


கல்கியின் எண்ண அலைகளிட்ட ஓசையில்

நான் தூக்கம் மறந்ததுண்டு...


சாண்டில்யன் வடித்த காதல் காட்சிகளை

கனவில் மறைந்திருந்து கண்டதுண்டு...


பாரதியார் கண்ணீர் சிந்திய வரலாறு படித்து

என் கண்கள் கண்ணீர் வடித்ததுண்டு...


கண்ணதாசன் தான் கடைசித் தமிழ்க்கவி என்று நான் வாதிட்டதுண்டு,


வைரமுத்துவின் வரிகள் படித்து நண்பர்களோடு சிலாகித்ததுண்டு,


முத்துகுமாரும் சிநேகனும், இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ திரையிசைக்கவிகளின் பாடல்களை என்னை மறந்து பாடியதுண்டு...


இறக்கும் வரை தமிழ் படிக்க ஆவலும், ஆசையும் உண்டு உண்டு !!!. “





தமிழ் ஒரு மொழி என்பதைத்தாண்டி, அது ஒரு நாகரிகத்தின் அடையாளம், உணர்வு என்று அர்த்தம் கொள்வதே சரி என்று நான் எண்ணுகிறேன்.


நாகரீகத்தின் படிநிலைகளான வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் - கால்நடை மேய்த்தல் - கடலமெற்செரல் - உழவுசெய்தல் என்பனவற்றை குறிஞ்சி - பாலை - முல்லை - நெய்தல் - மருதம் என்று பகுத்துப்பார்த்து பாடியவர் நம் மூதாதையோர். தமிழ், தமிழர்க்கு மொழி மட்டும் அல்ல என்பதற்கு இதைவிட ஆதாரம் இருக்க முடியாது.


இப்படி தமிழரின் வாழ்க்கையில் பிரியாயிடம் பெற்ற தமிழ் மொழி, காலத்துகேற்ப தன்னை மாற்றி இது நாள் வரை நம்மை இன்புறச்செய்து வருகிறது.


சங்க இலக்கியமாய், ஈரடியாய், தோத்திரப்பாடலாய், புதுக்கவிதையாய், இக்கால 'ஹைக்கூ' வாய், உருமாறி தமிழனை விட்டுப் பிரியாமல் இருக்கின்ற கன்னித்தமிழில் வெளிவந்த சில படைப்புகளை இங்கு நான் பதிவு செய்ய விழைகிறேன்.


பகிர்வதன்றோ தமிழரின் குணம்!!!

:-)



7 comments:

Silent Thunder said...

அப்ப உன்னோட future posts? அது தமிழா இல்ல இங்கிலிஷா??

Black Light said...

Both :-)

Black Light said...

"அது தமிழா இல்ல இங்கிலிஷா??"

இது தமிழா இல்லை ஆங்கிலமா?! :-)

Parth said...

You wrote all this? I sense a vairamuthu influence!

Black Light said...

@ parth

I wrote it..

I never intended to write it like what it is now. just started typing & it evolved into this :-)

Silent Thunder said...

"அது தமிழா இல்ல இங்கிலிஷா??"
Its up to u to decide wht language this is..:D

"I never intended to write it like what it is now. just started typing & it evolved into this :-)"
ஆஹா! உனக்குள்ள ஒரு வைரமுத்து tent போட்டு தூங்குற மாதிரி இருக்கே?

Black Light said...

I would be the happiest person if it happens :-)

I can learn Engineering in four years.
But I couldn't learn the art of writing or painting for the past 21 Years !!! :-(