18 August 2009

கனவு


·

நிஜத்தின் நிறைவேறா என் ஆசைகளை

நிறைவேற்றி வைக்கும் கருவூலம்...

போலியானது தான்! நிலையில்லாதது தான்!

ஆனால்...

நிலையற்ற நிஜமான போலி எண்ணங்களை

நித்தமும் எனக்கு தந்திடும் சொர்க்கம்.

·

தாகத்தின் போது கூட

நிஜத்தின் நீர்வீழ்ச்சியை வெறுக்கிறேன்...

கனவின் பாலைவனத்தைக் கண்டு பரவசமடைகிறேன்!

·

மோகத்தின் போது கூட

நினைவுகளின் முல்லையை வெறுக்கிறேன்!

கனவுகளின் முட்களை நேசிக்கிறேன்.

·

மொத்தத்தில்,

நிஜத்தை வெறுக்கிறேன், நினைவுகளை மறக்கிறேன்

நேசிக்கிறேன் ...!

கனவுகளை மட்டும்,

கண்மூடிக்கொண்டே...

2 comments:

Parth said...

இந்த கவிதைகளையெல்லாம் படிச்சா நீ என்னமோ என்ன மாதிரி வேலை இல்லாம திரியறயோனு நெனச்சுப்பாங்க. Ashok Leylandல ஆறு இலட்சம் சம்பளம் வாங்க போறனு தெரியாம போய்டும். :D

Black Light said...

:-/ Dont say wrong info to the world.

By the way no one writes because they have no other jobs to do.